இதழ் - 21 இதழ் - ௨௧
நாள் : 18-09-2022 நாள் : ௧௮-௦௯- ௨௦௨௨
சுட்டெழுத்துகள்
மொழிக்கு முதலிலே நின்று ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவதற்கு வரும் எழுத்து சுட்டெழுத்து எனப்படும். சுட்டெழுத்துகள் மூன்று ஆகும்.
சுட்டெழுத்துகள்: அ, இ, உ
அவன், இவன், உவன், அங்கு, இங்கு, அந்த, இந்த இச்சொற்கள் அனைத்தும் ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக் காட்டுவதற்கு சொற்களின் முதல் எழுத்துகளே காரணமாகும். ஆனால் இன்று 'உ' என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
சுட்டெழுத்தின் வகைகள்
சுட்டெழுத்து இரண்டு வகைப்படும்.
- அகச்சுட்டு
- புறச்சுட்டு
1. அகச்சுட்டு
சுட்டு எழுத்துகள் சொல்லின் அகத்தே (உள்ளே) நின்று சுட்டுப் பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
சான்று : அவன், இவன், உவன்
இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது. ஆகையால் இது அகச்சுட்டு எனப்படும்.
2. புறச்சுட்டு
சொற்களுக்குப் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப் பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
சான்று:
அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்
இச்சொற்களில் உள்ள சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும் ஆகையால் இது புறச்சுட்டு எனப்படும்.
சுட்டுத் திரிபு
அ, இ என்னும் சுட்டெழுத்துகள் திரிந்து அந்த, இந்த என வழங்கி வருவது சுட்டுத் திரிபு எனப்படும்.

அந்தப் பையன், இந்தப் பையன்
அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துகளுக்கும் பொருள் உண்டு
சேய்மைச் சுட்டெழுத்து - அ
தொலைவில் (சேய்மை) உள்ளவற்றைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் எழுத்து ‘அ’கரம்.
சான்று :
அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துகளுக்கும் பொருள் உண்டு
சேய்மைச் சுட்டெழுத்து - அ
தொலைவில் (சேய்மை) உள்ளவற்றைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் எழுத்து ‘அ’கரம்.
சான்று :
அவன், அவள், அவர், அது, அவை, அப்பையன் இவை தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இஃது சேய்மைச்சுட்டு எனப்படும்.
அண்மைச் சுட்டெழுத்து - இ
அருகிலுள்ளவற்றைச் (அண்மையில்) சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் எழுத்து ‘இ’கரம்.
சான்று :
இவன், இவள், இது, இவை, இப்பையன் இச்சொற்கள் அருகில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவை அண்மைச் சுட்டு எனப்படும்.
அருகிலுள்ளவற்றுக்கும் தொலைவிலுள்ளவற்றுக்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வழக்கத்தில் இல்லை.
அதேவேளை இந்த 'உ' என்னும் சுட்டெழுத்து யாழ்ப்பாணத் தமிழ்ப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தற்போதும் தொடர்ந்து இருக்கிறது.

( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment