இதழ் - 46 இதழ் - ௪௬
நாள் : 12-03-2023 நாள் : ௧௨-0௩-௨௦௨௩
பழமொழி–46
” இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று “
உண்மை விளக்கம்
ஒருவன் நல்லறங்கள் செய்யத் துணியும் போது சில இடர்பாடுகள் வரும். அத்தகைய இடர்களைத்தாண்டி அந்த அறச்செயலைச் செய்வதே நன்மை பயக்கும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'
ஒருவன் நற்காரியங்கள் செய்யம் போது அதைத் தடுக்க சில இடர்பாடுகள் வரும். அத்தகைய இடர்பாடுகளைத் தாண்டி அந்நற்காரியங்களை வருத்தம் கொள்ளாமலும் மனம் தளராமலும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அச்செயல் அனைவருக்கும் நற்பயனைத் தரும் என்பதையே 'இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment