இதழ் - 154 இதழ் - ௧௫௪
நாள் : 20 - 04 - 2025 நாள் : ௨௦ - ௦௪ - ௨௦௨௫
குறிஞ்சிப் பாட்டு
கபிலர் ஒரு அடியில் மூன்று பூக்களின் பெயர்களைப் பாடியிருந்ததையும் அடைமொழியோடு, எதுகை, மோனை கலந்த அப்பாடலில் தொன்னூற்றொன்பது பூக்களை வரிசைப்படுத்தியிருப்பதையும் சென்ற இதழில் படித்துச் சுவைத்தோம்.
அவ்வாறு கபிலர் குறிப்பிட்ட பூக்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு,
காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, தேமா (தேமாம்பூ), மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழ் (எறுழம்பூ), சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளம், பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், சிறுபூளை. குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, மாமரம் (மாம்பூ), தில்லை, பாலை, முல்லை, கஞ்சங்குல்லை, பிடவம், செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, வழை, காஞ்சி, கருங்குவளை (மணிக் குலை), பாங்கர், மரவம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகப்பூ, நள்ளிருணாறி, குருந்தம், வேங்கை, புழ என பாடலின் இடையில்தான் 99 பூக்களின் பெயர்கள் வருகின்றன.
இவை மட்டும் அல்ல, பிறவும் என்று அந்தப் பாடலில் குறிப்பிடுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் குறிஞ்சி நிலத்தில் பூத்திருந்தன என்பதை உய்த்துணரக் கூடியதாக உள்ளது.
கபிலர் தன் பாடல் மூலம் தமிழின் சுவையை மட்டுமன்றி, தமிழர் தம்வாழ்வினையும் எடுத்தியம்பியுள்ளார்.
வரும் கிழமையும் கபிலர் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment