பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 45                                                                                           இதழ் - ௪௫
நாள் : 05-03-2023                                                                            நாள் : 0௫-0-௨௦௨௩
 
  
 
ஆகுபெயர்களின் வகைகள்
( அளவை ஆகுபெயர்)
 
 
எண்ணல் அளவையாகுபெயர்
  • ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகிவருவது எண்ணல் அளவையாகுபெயர் எனப்படும்.
சான்று
  • நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
        இதில் நான்கு இரண்டு என்பன எண்ணிக்கையைக் குறித்தனவாகும். ஆனால் அவை இங்கு நாலடியார் திருக்குறள் என்னும் இரண்டு நூற்களுக்கும் ஆகிவந்ததால் இது எண்ணல் அளவையாகுபெயர் ஆகும்.

 
எடுத்தல் அளவையாகுபெயர்
  • ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகிவருவது எடுத்தல் அளவையாகுபெயர் ஆகும்.
சான்று
  • நான்கு கிலோ வாங்கினேன்.
     இங்கு கிலோ என்னும் எடுத்தலளவை ஆகுபெயர். அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகிவருவதால் எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

 
முகத்தலளவை ஆகுபெயர்
  • முகத்தல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவையாகுபெயர் எனப்படும்.
சான்று
  • ஐந்து லிட்டர் வாங்கி வா
    இதில் லிட்டர் என்னும் முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகிவந்துள்ளது. ஆகவே இது முகத்தல் அளவையாகுபெயர் ஆகும்.

 
நீட்டல் அளவையாகுபெயர்
  • நீட்டி அளப்பது நீட்டல் அளவையாகு பெயராகும். ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகிவருவது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.
சான்று
  • இரண்டு மீட்டர் கொடுங்கள்.
    இதில் மீட்டர் என்னும் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகிவருவது நீட்டல் அளவையாகுபெயர் ஆகும்.
 
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment