இதழ் - 58 இதழ் - ௫௮
நாள் : 04-06-2023 நாள் : 0௪-0௬-௨௦௨௩ பழமொழி – 58
” இருளின் இருந்தும் வெளி “
விளக்கம்
ஒருவன் தன் உள்ளத்தில் அச்சம் உடையவனாக இருந்தால், இருளில் மறைந்து இருந்தாலும் பகை தன்னை அழித்துவிடுமோ என்ற அச்சம் அவனைத் துன்புறுத்தும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.
அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
'இருளின் இருந்தும் வெளி'.
அச்சம் கொண்ட ஒருவன் அரண்மனைக்குள் பாதுகாப்பாய் இருந்தாலும் போருக்குப் பயந்து ஆற்றாதவனாகப் பயந்து, பதுங்கி இருப்பான். இத்தகைய ஒருவன் பகைவர்களிடம் எளிதில் அகப்பட்டுக் கொள்வான்.
இத்தகையோர், பறவை எவ்வாறு இருளில் இரவு நேரங்களில் கூட அதனைப் பகலென நினைத்து அஞ்சுமோ அத்தன்மையைப் போன்றவர்கள் என்பதையே 'இருளின் இருந்தும் வெளி' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment