பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 167                                                                              இதழ் - ௧
நாள் : 27 - 07 - 2025                                                           நாள் :  -  - ௨௦௨

 



சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்

புலவரும் ஊர்ப்பெயரும்

ஒட்டக் கூத்தர்

    தமிழ்ப்புலவர்தம் பெயர்களும் அருமையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன . சோழ மன்னர் அவைக்களத்தில் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்று விளங்கிய கவிஞருள் ஒருவர் ஒட்டக் கூத்தர். அவர் மலரி என்ற சிற்றூரிலே பிறந்தவர். முன்று சோழ மன்னர்கள் அவரை ஆதரித்தார்கள். அன்னாருள் ஒருவன் தன்னை அவர் மாணவன் எனப்பேசி பெருமை கொண்டான். பேரளத்துக்கு அருகேயுள்ள ஒரு சிற்றூர் அக் கவிஞருக்குப் புலமைக் காணியாக அளிக்கப்பட்டது. அதன் பெயராகிய கூத்தனூர் என்பது, ஒட்டக்கூத்தர் பெயரால் வந்ததென்று தெரிகின்றது. கலைமகள் அருளால் சீரும் சிறப்பும் பெற்ற ஒட்டக்கூத்தரது மரபில் தோன்றிய வரதக் கூத்தன் அங்கு அத் தெய்வத்திற்கு ஓர் ஆலயம் அமைத்துப் போற்றினான் என்பர்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment