பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 53                                                                                           இதழ் -
நாள் : 30-04-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
  
 
பழமொழி – 53
 
” மோதிரக் கையால் குட்டு படனும் “
 
விளக்கம்
     ஒருவன், தலையில் குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனத் தவறாக  இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
 
” மோதகக் கையனைக் குட்டிக்கொள் “
 
உண்மை விளக்கம்
     இங்கு மோதகக் கையன் என்பது விநாயகரைக் குறிக்கும். விநாயகரை வழிபடும் போது தலையின் முன் நெற்றியில் குட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு குட்டிக் கொள்ளும் போது நம் மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் தூண்டப்படும் என்பதற்கே அத்தகைய முறையில் வழிபடுகிறோம். இதனையே ”மோதகக் கையனைக் குட்டிக்கொள்“ என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது. இப்பழமொழி மருவி ”மோதிரக் கையால் குட்டு படனும்“ என்று நாம் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
 
    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment