இதழ் - 93 இதழ் - ௯௩
நாள் : 04-02-2024 நாள் : 0௪-0௨-௨௦௨௪
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
சச்சிதானந்தம் | உண்மையறிவின்பம் |
சாதித்தல் | நிலைநிறுத்தல் |
சாவதானம் | ஓய்வு, ஒழிவு, உன்னிப்பு |
சூரணம் | தூள் |
சுவிகாரம் | தனதாக்குதல் |
- சச்சிதானந்தத்தில் மூழ்குங்கள்.
- உண்மையறிவின்பத்தில் மூழ்குங்கள்.
- அறத்துடன் வாழ்ந்து சாதித்துக் காட்டினான்.
- அறத்துடன் வாழ்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டான்.
- சாவதானமாக இருந்துவிட்டு இந்தப் பணியை முடியுங்கள்.
- ஓய்வாக இருந்துவிட்டு இந்தப் பணியை முடியுங்கள்.
- இந்தச் சூரணத்தைத் தேனுடன் கலந்து சாப்பிடுங்கள்.
- இந்தத் தூளைத் தேனுடன் கலந்து சாப்பிடுங்கள்.
- இந்த நாய்க்குட்டிகளை அவன் சுவிகாரம் எடுத்துக் கொண்டான்.
- இந்த நாய்க்குட்டிகளை அவன் தனதாக்கிக் கொண்டான்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment