இதழ் - 201 இதழ் - ௨0௧
நாள் : 31 / 05 / 2026 நாள் : ௩௧ / 0௫ / ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 201
' ஓரறையுள் பாம்போ(டு) உடனுறையும் ஆறு '
விளக்கம்
ஒரே அறையினுள் பாம்புடன் கூடி வாழ்வது என்பது மிகவும் ஆபத்தான மற்றும் பரிதாப நிலைமை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
' ஓரறையுள் பாம்போ(டு) உடனுறையும் ஆறு '
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.
அரசனுடன் நட்பாக இருக்கும் ஒருவன், அரசனைக் கவிழ்த்து, தான் தலைமைப்பதவியை அடைய வேண்டும் என்று எண்ணினால், அத்தகையோரை அரசனானவன் உடனே அழித்து ஒழிக்க வேண்டும்.
அத்தகையோருடன் நட்பாக இருப்பது உயிரைப் போக்கும் விஷத்தன்மை கொண்ட பாம்புடன் ஒரே அறையில் தங்குவது எத்தகைய ஆபத்தைத் தருமோ அத்தகையது என்பதைக் குறிக்கவே 'ஓரறையுள் பாம்போ(டு) உடனுறையும் ஆறு' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment