பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 132                                                                                             இதழ் - ௧௩௨
நாள் : 03- 11 - 2024                                                                             நாள் : ௦௩ - ௧௧ - ௨௦௨௪




இராஜேந்திர சோழன் பெயரில் எழுந்த ஊர்கள்

தீனசிந்தாமணி

முதற் குலோத்துங்கனின் மற்றுமொரு தேவியாகிய தீனசிந்தாமணியின் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. தென் ஆர்க்காட்டிலுள்ள சிந்தாமணி என்னும் ஊர் முன்னாளில் தீன சிந்தாமணி நல்லூர் என வழங்கிற்று. எனவே, சிந்தாமணி என்பது அதன் குறுக்கமாகத் தோன்றுகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள கடைக்கோட்டுப் பிரமதேசம், தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுதலால் அவ்வூரும் இத்தேவியின் பெயர்தாங்கி நிற்பதாகத் தெரிகின்றது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment