இதழ் - 74 இதழ் - ௭௪
நாள் : 24-09-2023 நாள் : ௨௪-0௯-௨௦௨௩
பழமொழி – 74
” இழவன்று எருதுண்ட உப்பு ”
விளக்கம்
எருது ஒன்றனுக்கு உணவில் அதிகமான உப்பினை இட்டுக் கொடுப்பினும் அதன் உாிமையாளருக்கு அந்த எருது உண்மையாக உழைக்கும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.
கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
'இழவன்று எருதுண்ட உப்பு'.
உண்மை விளக்கம்
ஒரு செயலைச் சிறந்த முறையில் செய்வதற்கு அவன் நம் உறவினன் என்றோ, உறவினன் அல்லாதவன் என்றோ கருத வேண்டாம். கற்றறிந்த ஒருவனை ஆராய்ந்து பார்த்து அவனிடம் அச்செயலை கொடுத்தால் சிறப்பாகச் செய்வான்.
எருது எவ்வாறு தன் உரிமையாளர், உணவில் அதிக உப்பினைக் கலந்து கொடுப்பினும் அவனுக்கு உண்மையாக உழைப்பது போல கற்றவனிடம் கொடுக்கும் செயலை அவன் உண்மையாகச் செய்து முடிப்பான் என்பதையே 'இழவன்று எருதுண்ட உப்பு' என்ற இப்பழமொழி நமக்குப் பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment