இதழ் - 72 இதழ் - ௭௨
நாள் : 10-09-2023 நாள் : ௧0-0௯-௨௦௨௩
பழமொழி – 72
” இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங் கலம் ”
விளக்கம்
யானையானது நிலத்திலோ அல்லது ஓா் இடத்திலோ உள்ள பொருளை உண்ணவோ சேதப்படுத்தவோ தொடங்கிவிட்டால் அப்பொருளைப் பாதுகாத்து வைக்க எத்தகைய கலமும்(பாத்திரம்) இல்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'
அரசன் தன் குடிமக்களிடம் செங்கோன்மை உடையவனாக விளங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் குடிமக்களின் செல்வத்தை அவர்களின் நலனுக்குப் பயன்படுத்தாமல் தானே கையாண்டு கொண்டால் அதனால் எத்தகைய பயனும் குடிமக்களுக்கு இல்லை.
அரசனின் இத்தகைய செயல், யானையானது ஒரு பொருளை உண்ணவோ சேதப்படுத்தவோ தொடங்கிவிட்டால் அப்பொருளைப் பாதுகாத்து வைக்க எத்தகைய கலமும் (பாத்திரம்) இல்லை என்பதையே ‘இல்லையே, யானை தொடுவுண்ணின் மூடுங் கலம்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment