இதழ் - 159 இதழ் - ௧௫௯
நாள் : 01 - 06 - 2025 நாள் : ௦௧ - ௦௬ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 158
“விண் பொய்த்தால் மண் பொய்க்கும்”
விளக்கம்
நம் முன்னோர்கள் இயற்கைச் சூழலை எதிர்நோக்கியே விவசாயம் செய்தனர். அதன்படி கால பருவ நிலைகளுக்கு ஏற்ப அதற்கேற்ற பயிர்களை விவசாயம் செய்தனர்.
சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்தில் மழை பொழியவில்லை என்றால் பயிரிட்ட விளைபயிர்கள் அழிந்து போகும் என்பதைக் குறிக்கவே “விண் பொய்த்தால் மண் பொய்க்கும்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அதாவது, வானத்தில் மழை பெய்யவில்லை என்றால் மண்ணில் விளைச்சல் இருக்காது என்பதையே இப்பழமொழி குறிக்கிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment