பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 59                                                                                           இதழ் -
நாள் : 11-06-2023                                                                              நாள் : -0-௨௦௨௩
  
 
பழமொழி – 59    
” கை காய்த்தால் கமுகு காயக்கும் “
 
விளக்கம்
     ஒருவன் கடினமாகக் கை காய்க்கும் (காப்பு) அளவு உழைத்து விவசாயம் செய்தால் தான் கமுகு (பாக்கு மரம்) காய்க்கும் என்பது  இப்பழமொழியின் பொருளாகும்.
 
 
 
” கை காய்த்தால் கமுகு காயக்கும் “
உண்மை விளக்கம்
 
      இங்கு கமுகு என்றால் பாக்கு மரம்.
       
     விடாமுயற்சி என்பது வெற்றி தருவது மட்டுமல்ல அந்த விடாமுயற்சிக்கு நல்ல உடல் வலிமையும் மனவலிமையும் தேவை என்பது இப்பழமொழியின் விளக்கம் ஆகும்.
 
     கை காய்த்துப்போகும் அளவிற்கு உழைத்தால் தான் பாக்கு மரத்தில் இருந்து நல்ல வருவாய் ஈட்ட முடியும். அதுபோல ஒருவன் நல்ல உடல் வலிமையில் இருக்கும் போதே அந்த உழைப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே “கை காய்த்தால் கமுகு காயக்கும்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment