பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 28                                                            இதழ் - ௨௮
நாள் : 05-11-2022                                               நாள் : 0 - ௧௧ - ௨௦௨௨

 
 
பழமொழி – 28
 
” அறியும் பெரிதாள் பவனே பெரிது

     சான்றோர் அறிவில் சிறந்தவர்களாய் இருப்பர். அத்தகைய அறிவில் சிறந்தோர்க்கு நல்லவை, கெட்டவை எதுவென அறிவுரை கூறத் தேவை ஏற்படாது. அதனை அவர்களே அறிந்து செயல்படுவர் என்பதையே இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

     பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
     சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
     அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்!  'அறியும்
     பெரிதாள் பவனே பெரிது'.


     அறிவுடையச் சான்றோர் அறிவில் சிறந்த செயல்களையே செய்வர், செய்யவும் விரும்புவர். அத்தகையச் சான்றோர்களுக்கு நல்லவையென்றும் தீயவையென்றும் அறிவுரை சொல்லத் தேவையில்லை. ஏனெனில் அச்சான்றோர்கள் அறச்செயல்களை நன்கறிவர். இதனையே 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
 
    இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
    

No comments:

Post a Comment