பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 85                                                                                               இதழ் - 
நாள் : 10-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩



 
முத்தரையர்
 
        முத்தரையர் என்னும் பெயர் பெற்ற பண்டைக் குலத்தார் பற்றிப் பழந்தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது. அக்குலத்தினர் சிறந்த படைவீரராக விளங்கினர். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார் என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. 

         சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு முத்தரையன் முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி நாட்டிலுள்ள முத்தரசநல்லூரும், முத்தரசன்கோட்டை ஆகிய ஊர்கள் அக்குலத்தாரது பெருமையைக் காட்டுவனவாகும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment