பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 178                                                                                     இதழ் - ௧
நாள் : 12 - 10 - 2025                                                                    நாள் :   - ௨௦௨

 


இடத்தின் பெயரால் எழுந்த ஊர்கள்


சாய்க்காடு

    புலவர் பாடும் புகழுடைய பூம்புகார் நகரத்தைச் சார்ந்தது திருச்சாய்க்காடு ஆகும். தேவாரத்தில் பூம்புகார்ச் சாய்க்காடு என்றும், காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காடு என்றும், அவ்வூர் குறிக்கப்படுகின்றது. இக்காலத்தில் சாயாவனம் என்பது அதன் பெயர்.


திருக்கொள்ளிக்காடு

   திருநெல்லிக்காவுக்குத் தென் மேற்கேயுள்ளது கொள்ளிக்காடு. அவ்வூரைப் பாடி அருளிய திருஞானசம்பந்தர்,
        " வெஞ்சின மருப்போடு விரைய வந்தடை
         குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே"
என்று ஒரு பதிகத்தில் குறித்தமையால் 'கரியுரித்த நாயனார் கோவில்“ என்னும் பெயர் அதற்கு அமைவதாயிற்று. இப்பொழுது அவ்வூர் தெற்குக்காடு என வழங்கப்பட்டு வருகின்றது.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .



முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment