இதழ் - 130 இதழ் - ௧௩௦
நாள் : 20- 10 - 2024 நாள் : ௨௦ - ௧௦ - ௨௦௨௪
கங்கைகொண்ட சோழன்
இராஜேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கை கொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உண்டு.
கடாரம் கொண்டான்
கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இராஜேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ்விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக வழங்குகின்றது. தொண்டை நாட்டு மணவில் கோட்டத்தில் கடாரங் கொண்ட சோழபுரம் இருந்ததென்று சாசனம் வழியாக அறியமுடிகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment