அரசன் தன் பணியாளிடம் பெரிய காரியத்தைச் சொல்ல அதனை மறுத்து சிறியதைச் செய்தால் அவர் அப்பணிக்குத் தகுதியற்றவர் ஆவார். தம் உயிரைக் கொடுத்தாயினும் அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் அன்றி, மறுப்பவர் அப்பணிக்கு உதவார் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
( இங்கு 'ஆல்' - பெரிது; 'பூல்' - சிறிது என்று பொருள் ஆகும்.)
எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'
அரசன் தன் பணியாளிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அப்பணியாளன் தன் உயிரைக் கொடுத்தாவது அப்பணியைச் செய்து முடித்திருக்க வேண்டும். அப்படியல்லாமல் அக்காரியத்தைச் செய்யாமல் மறுத்து சொல்வார்களானால் அப்பணியாளன் அப்பணிக்குத் தகுதியற்றவர் ஆவார். அதனையே 'ஆல்என்னிற் பூல்என்னு மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment