நாள் : 24-12-2023 நாள் : ௨௪-௧௨-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
அதிஷ்டம் | ஆகூழ் |
துரதிஷ்டம் | போகூழ் |
எக்கச்சக்கம் | மிகுதி |
விசா | நுழைவாணை |
சம்பளம் | ஊதியம் |
- நான் உங்கள் மகளாகப் பிறந்தது அதிர்ஷ்டமே.
- நான் உங்கள் மகளாகப் பிறந்தது ஆகூழே.
- என் வாழ்க்கையில் துரதிஷ்டம் வந்ததே இல்லை.
- என் வாழ்க்கையில் போகூழ் வந்ததே இல்லை.
- எக்கச்சக்கமான நூல்கள் என்னிடம் உள்ளன.
- மிகுதியான நூல்கள் என்னிடம் உள்ளன.
- பிற நாடுகளுக்குச் செல்ல விசா அவசியம்.
- பிற நாடுகளுக்குச் செல்ல நுழைவாணை அவசியம்.
- இன்று சம்பளம் வந்தது.
- இன்று ஊதியம் வந்தது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment