பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 106                                                                                                 இதழ் - 0
நாள் : 05-05-2024                                                                                 நாள் : 0ரு-0ரு-௨௦௨



            பல்லவ மன்னர்களின் பெயர்களில் அமைந்த ஊர்கள்

    பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டை ஆளத் தலைப்பட்டார்கள். ஏறக்குறைய அறு நூறாண்டுகள் அம்மன்னார் அரசு புரிந்தனர். சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கையாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர் நாடும் பெயரும் குறிக்கப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில ஊர்ப் பெயர்களில் இன்றும் விளங்குகின்றது.


சிம்மவிஷ்ணுவர்மன்

    ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பல்லவன், சிம்ம விஷ்ணு வர்மன் மன்னன் ஆவார். அவர் சோழ மன்னனை வென்று, காவிரி நாட்டிலும் ஆட்சி செலுத்தினான் என்று சாசனம் அறிவிக்கின்றது. அவன் காலத்தில் காவிரிக்கரையில் கும்பகோண வட்டத்திலுள்ள கஞ்சனூர், சிம்ம விஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று மறுபெயர் பெற்றது. வடஆர்க்காட்டில் உள்ள சீயமங்கலமும் அவன் பெயரால் அமைந்தது என்பர்.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment