பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 71                                                                                           இதழ் - 
நாள் : 03-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
  
 
 
ஆரை
 
    ஆரை என்னும் தமிழ்ச்சொல் கோட்டையின் மீதுள்ள மதிலைக் குறிப்பதாகும். 
 
    பழங்தமிழகத்தில் அரண்மனை மற்றும் கோட்டைகளில் மதில்கள் பல இருந்ததை வரலாற்று சான்றுகளால் அறிகிறோம். சேலம் நாட்டில் ஆரைக்கல் என்னும் கோட்டை அமைந்துள்ளது. அங்குள்ள பாறையின் மீது பெருமாள் கோவில் எழுப்பப்பட்டு சிறந்து விளங்கியது. பெருமாளுடைய திருநாமம் ஆரைக்கற் பாறையில் போடப்பட்டது. அக்காரணத்தால் ஆரைக்கல் என்னும் பழம் பெயர் மாறி நாமக்கல் என்னும் பெயர் அவ்வூருக்கு வழங்கலாயிற்று.

     அஃது இரு பகுதிகளை உடையதாய் கோட்டை இருநூறடி உயரமுள்ள பாறையின் உச்சியில் விளங்குகின்றது. ஒன்று கோட்டையாகவும் மற்றொன்று பேட்டையாகவும் காணப்படுகிறது. அரைமைல் சுற்றளவுடைய கோட்டையின் மதில்கள் இன்றும் காணப்படுகின்றன. தற்போது அதன் ஒரு பகுதியான பேட்டையே ஊராக விளங்கி வருவதைக் காணலாம்.
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment