பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 34                                                                 இதழ் -
நாள் : 18-12-2022                                                     நாள் : - - ௨௦௨௨ 
 
  
 
பழமொழி – 34
 
'' ஆடுபணைப் பொய்க்காலே போன்று ''
 
     நாட்டின் வேந்தர், தகுதியில்லாதவர்கள் சொல்லும் பொய்களை உண்மையெனக் கொண்டு நடந்தால் அந்நாடு மூங்கிலால் செய்த பொய்கால் எவ்வாறு திடமின்றி ஆடுமோ அது போல் ஆகிவிடும்  என்பது இப்பழமொழியின் விளக்கமாம்.
 
     பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
     தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து
     ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
     'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.


     செங்கோல் முறைமையுடன் ஆட்சி செய்து வரும் மன்னனின் நிலத்தில் பொய்களை மட்டுமே சொல்லித் திாியும் தகுதியில்லாதவர்கள் பலர் இருப்பர். அத்தகையோர் சொல்லும் பொய்களை மன்னன் அப்படியே ஏற்காமல் அதன் உண்மைத்தன்மையை அறிந்து செயலாற்ற வேண்டும். 
 
     அவ்வாறு செய்யாமல் அத்தகையோரின் சொற்களுக்கு முக்கியத்துவம் தந்து மன்னன் செயல்பட்டால் அந்நிலத்தின் ஆட்சி மூங்கிலால் செய்த பொய்க்கால் எவ்வாறு திடமின்றி, நிலையில்லாமல் ஆடுமோ அது போல் ஆகிவிடும் என்பதையே 'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment