பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 100                                                                                                  இதழ் - 00
நாள் : 23-03-2024                                                                                  நாள் : -0-௨௦௨


அடியகரம் ஐயாதல்

  • “அடி அகரம் ஐ ஆதல்” என்னும் விதியாவது முதல் எழுத்து அகரமாக இருப்பின் ஐகாரமாக மாறுதல் அடி அகரம் ஐயாதல் எனப்படும்.

சான்று

பைங்கூழ்
  • பசுமை + கூழ்  = பைங்கூழ்
  • பசுமை + கூழ்  ( ஈறு போதல் ‘மை’ நீங்குதல்)
  • பசு+ கூழ் ( அடி அகரம் ஐயாதல்- விதிப்படி‘ப’ உயிர்மெய் எழுத்து ‘பை’ ஆயிற்று )
  • பைசு + கூழ் ( இனையவும் – ‘சு’ நீங்கல் )
  • பை + கூழ்  ( இனமிகல் -க் -ங் )
  • பைங்கூழ்

விளக்கம்
  • ஈறு போதல் என்னும் விதிப்படி மை நீங்கியது (பசு+ கூழ் ) அடி அகரம் ஐயாதல் என்னும் விதிப்படி ‘ப’ – ‘பை’ ஆனது. இனையவும் என்னும் விதிப்படி உயிர்மெய் 'சு' கெட்டது. என்னும் இனமிகல் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான ‘க்’ எழுத்துக்கு இனமான ‘ங்’ மிகுந்து ‘பைங்கூழ்’ எனப் புணர்ந்தது.

    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment