பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 154                                                                                            இதழ் - ௧
நாள் : 20 - 04 - 2025                                                                        நாள் : ௨௦ -  - ௨௦௨

 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


தண்டேச்சுரர்

     சண்டேச்சுர நாயனார், சிவாலயத்தில் சிறப்பாகப் போற்றப்படும் சிவனடியார்களுள் ஒருவர். சிவ வழிபாட்டிற்கு இடையூறு செய்த தந்தையை மழுவால் எறிந்து, "அரனார் மகனார்" ஆகிய அப்பெருமானைச் சண்டேச்சுரர் என்றும், தண்டேச்சுரர் என்றும் சைவ உலகம் வணங்குகின்றது. அவர் பெயரால் எழுந்த ஊர் சண்டேச்சுர நல்லூர் ஆகும். அவ்வூர் சிதம்பர வட்டத்திலுள்ளது.


சோமாசி மாறன் 

     திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படுகின்ற மற்றுமொரு சிவனடியார்களில் ஒருவர் சோமாசிமாற நாயனார். அவர் திரு அம்பர் நகரத்து மறையவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் வாக்கால் தெரிகின்றது. அன்னார் பெயரைக் கொண்டெழுந்துள்ள சோமாசி என்ற ஊர் இராமநாதபுரத்துப் பரமக்குடி வட்டத்தில் உள்ளது. 


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment