பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 180                                                                                இதழ் - ௧
நாள் : 26 - 10 - 2025                                                              நாள் :   - ௨௦௨

 



சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருவெண்காடு

   மூவர் தேவார பாடல்களல் சிறப்புப் பெற்றுள்ள மூதூர்களில் ஒன்று திருவெண்காடு. வடமொழியில் அது சுவேதவனம் எனப்படும். 

    'வேலைசூழ் வெண்காடு' என்று தேவாரம் பாடுதலால் அத்தலம் கடலருகேயமைந்த காடு என்பது இனிது விளங்கும். 

    சுவேதகேது என்னும் மறையவன் ஈசனை வழிபட்டுக் காலனைக் கடந்த இடம் திருவெண்காடு என்பர். அங்குள்ள முக்குளம் என்னும் தடாகமும் தேவாரத்தில் போற்றப்படுகின்றது.


திருவேற்காடு

  சென்னைக்கு அருகே அமைந்துள்ள காடுவெட்டியாற்றின் கரையில் அமைந்துள்ள பழைமையான தலம் திருவேற்காடு

    அறுபத்து மூன்று திருத்தொண்டர்களுள் ஒருவராகிய மூர்க்க நாயனார் பிறந்தருளிய அவ்வூர் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது.  


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment