இதழ் - 77 இதழ் - ௭௭
நாள் : 15-10-2023 நாள் : ௧௫-௧0-௨௦௨௩
பழமொழி – 77
” முதலைக் கண்ணீர் வடிப்பது போல ”
விளக்கம்
போலியாக அழுதுகொண்டிருக்கும் ஒருவனைக் குறிப்புணர்த்த நம் முன்னோர்கள் இப்பழமொழியைப் பயன்படுத்தினர். ஏனெனில் முதலை இயல்பாகக் கண்ணீர் வடிப்பதில்லை. அவ்வாறு கண்ணீர் வடித்தாலும் தண்ணீருக்குள் கண்ணீர் வடிப்பதை அறிய முடிவதில்லை என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
” முதலைக் கண்ணீர் வடிப்பது போல ”
மேற்கண்டது போல், முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதாவது, மற்றவர்களை ஏமாற்ற போலியாக அழும் ஒருவனுக்கு உவமையாக இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர் என்றாலும் இதன் உண்மைக்காரணம், இங்கு முதலை என்பது, ஒருவன் தன் வியாபாரத்திற்காகச் செய்த முதலீட்டைக் குறிக்கிறது.
ஒருவன் தான் முதலீடு செய்த வியாபாரத்தில் தக்க இலாபம் ஈட்ட முடியாமல் அம்முதலீட்டை இழந்து கண்ணீர் வடிப்பதையே அதாவது முதலை இழந்தவன் வடிக்கும் கண்ணீர் போல என்பதையே “முதலைக் கண்ணீர் வடிப்பது போல” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment