பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 157                                                                               இதழ் - ௧
நாள் : 11 - 05 - 2025                                                              நாள் :  -  - ௨௦௨

  


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருமழிசையாழ்வார்

     சென்னைக்கு மேற்கேயுள்ள பூந்தமல்லி என்னும் பூவிருந்த வல்லிக்கு அண்மையில் அமைந்தது திருமழிசை. இவ்வூரில் பிறந்து இளமையிலேயே பரஞானம் பெற்று, திருவல்லிக்கேணியில் நெடுங்காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்து, கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் பரமபதம் அடைந்தார் ஓர் ஆழ்வார் திருமழிசையாழ்வார். அப்பகுதியில் அவர் பிறந்தமையால் மழிசை திருமழிசை ஆயிற்று. அவ்வாழ்வாரும் திருமழிசை ஆழ்வார் என்றே வழங்கப் பெறுகின்றார். அவ்வூருக்குப் பெயரும் திருமழிசை என்று அவ்வாறே அமைந்துவிட்டது 

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment