இதழ் - 113 இதழ் - ௧௧௩
நாள் : 23 - 06 - 2024 நாள் : ௨௩ - 0௬ - ௨௦௨௪
சொற்றொடர்
- ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் என்பதை அறிந்தோம். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் என்பதையும் அறிவோம்.
- பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர்ச் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ, தொக்கி மறைந்து இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர்.
- கரும்பு தின்றான்.
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு இடையில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
வகைகள்
- தொகைநிலைத் தொடரின் வகைகள் ஆறு வகைப்படும்.
அவை,
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத் தொகை
- அன்மொழித்தொகை
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment