பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 114                                                                                   இதழ் - ௧௧
நாள் : 30 - 06 - 2024                                                              நாள் : 0 - 0௬ - ௨௦௨௪


வேற்றுமைத்தொகை 
  • ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
சான்று
  • மதுரை சென்றார்
     இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
  • இரண்டாம் வேற்றுமைத்தொகை - ஐ
    • திருவாசகம் படித்தான் - திருவாசகத்தைப் படித்தான் (ஐ)
  • மூன்றாம் வேற்றுமைத்தொகை - ஆல்
    • தலைவணங்கு - தலையால் வணங்கு (ஆல்)
  • நான்காம் வேற்றுமைத்தொகை - கு 
    • சிதம்பரம் சென்றான் - சிதம்பரத்துக்குச் சென்றான் (கு)
  • ஐந்தாம் வேற்றுமைத் தொகை - இன்
    • மலைவீழ் அருவி - மலையின்வீழ் அருவி (இன்)
  • ஆறாம் வேற்றுமைத்தொகை – அது 
    • கம்பர் பாடல் - கம்பரது பாடல் (அது)
  • ஏழாம் வேற்றுமைத்தொகை - கண்
    • மலைக்குகை – மலையின் கண் குகை (கண்)
       தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment