இதழ் - 11 இதழ் - ௧௧
நாள் : 10-07-2022 நாள் : ௧௦-௦௭ - ௨௦௨௨
பழமொழி – 11
'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே'
வாழ்வில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும். அதை விடுத்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கப்பல் கவிழ்ந்தது போல் கவலை கொள்ளக்கூடாது என்று நாம் இந்தப் பழமொழிக்கு பொருள் விளங்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான பழமொழி யாதெனில், 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கைவைக்காதே' என்பதாகும்.
நாம் பார்க்கும் பெரிய பொருள் கப்பல். அத்தகை கப்பலே கவிழ்ந்தாலும் “கன்னக்கோலில்” கைவைக்காதே என்பது இதன் பொருளாகும். கன்னக்கோல் என்றால் திருடுவதற்குப் (பூட்டை உடைக்க) பயன்படுத்தப்படும் ஆயுதம் ஆகும். கப்பலே கவிழ்ந்தாலும் பிறர்பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும்.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment