பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 30                                                                 இதழ் -
நாள் : 20-11-2022                                                     நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
 
 
 
பழமொழி – 30
” ஆகாதே உண்டது நீலம் பிறிது ”

விளக்கம் 
     ஒரு பொருளின் மீது நீல நிறம் பற்றிய பின்னர் அதன் நிறத்தின் தன்மை மாறாது. மற்ற நிறங்கள் இணைந்தாலும் முன்னர் பற்றிய நீல நிறத்தின் ஆதிக்கம் குறையாது என்பது இப்பழமொழியின் விளக்கமாம்.

     ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
     மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
     கொண்டதே கொண்டு விடானாகும் ; 'ஆகாதே
     உண்டது நீலம் பிறிது'.

     கடுஞ்சினங் கொண்ட ஒருவன் உலக ஒழுக்கங்களையும் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும் உணராமல் செயல்படுவான். மேலும் தன் இயல்பு நிலையிலிருந்து மாறமாட்டான். இதனை ஒரு பொருள் நீலநிறம் பற்றியபின், அது எவ்வாறு அந்தப் பொருளை விட்டு மறைவதில்லையோ அதுபோலவே, மூர்க்கனும் (கடுஞ்சினம் கொண்டவன்) தன் புத்தியினின்று எக்காலத்திலும் மாறமாட்டான்.

      'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்ற முன்னோர் சொற்களும் இங்கு நினைவுகூறத் தக்கது. இதனையே 'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்று இப்பழமொழி பொருள் உணா்த்துகிறது.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment