பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 84                                                                                                இதழ் - 
நாள் : 03-12-2023                                                                                 நாள் : --௨௦௨௩



பழமொழி – 84

” இளையோனே ஆயினும் மூத்தோனே ஆடு மகன் 
 

விளக்கம்

     ஒருவன் தான் சிறந்த கல்வியாளனாக இருப்பினும் தான் பொறுப்பேற்ற செயலை இறுதிவரை தளராது நிலைத்து நின்று முடித்தால் மட்டுமே அறிவார்ந்தவன் ஆவான் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.


உண்மை விளக்கம்

         கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
         அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
         நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
         மூத்தோனே ஆடு மகன்'.

     ஒருவன் தான் கற்ற கல்வி அறிவு பயனின்றி போனாலும், தான் எடுத்த செயலை இறுதி வரை தளராது நின்று முடித்து விடுகின்றவன் அறிவுடையவன் ஆவான். அவ்வாறு அச்செயலைச் செய்து முடிப்பவன், வயதில் இளையவனே ஆனாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ளல் வேண்டும். இதனையே 'இளையோனே ஆயினும் மூத்தோனே ஆடு மகன்' என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.


     மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment