இதழ் - 198 இதழ் - ௧௯௮
நாள் : 19 / 04 / 2026 நாள் : ௧௯ / 0௪ / ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 198
' தூங்கியவன் தொடையில் திரித்தவரை இலாபம் '
விளக்கம்
ஒருவன் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனுடைய தொடையில் எவ்வளவு அதிகமாக் கயிறு திரிக்கிறோமோ அந்த அளவிற்கு இலாபம் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
' தூங்கியவன் தொடையில் திரித்தவரை இலாபம் '
உண்மை விளக்கம்
முற்காலத்தில் தேங்காய் நார்களைப் பிரித்து அதைக் கயிறாகத் தங்கள் தொடையில் வைத்து உருட்டித் திரித்து அதைக் கயிறாக்குவர். இதில் தங்கள் தொடைப்பகுதியில் காயங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்க யாரேனும் தங்கள் அருகில் தூங்கிக் கொண்டிருப்பின் அவர்கள் தொடைப்பகுதியைக் கயிறு திரிக்கப் பயன்படுத்திக் கொள்வர். அது தங்கள் காயங்களையும் சிரமங்களையும் தவிர்ப்பதற்குத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பயன்படுத்திக்கொள்வர்.
இதில் முடிந்தவரை பிறரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வீணர்களைக் குறிக்கவே “தூங்கியவன் தொடையில் திரித்தவரை இலாபம்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment