பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 189                                                                                        இதழ் - ௧
நாள்   : 01 / 02 / 2026                                                                   நாள்   :  0௧ / 0 / ௨௦௨

 


சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்


திருப்பரங்குன்றம் 

    முருகனுக்குரிய படை வீடுகளுள் முதலாக வைத்துப் போற்றப்படுவதும், தேவாரப் பாமாலை பெற்றதுமாகிய திருப்பரங்குன்றம், மதுரையம்பதிக்கு அருகேயுள்ளது. அப்பரங்குன்றத்து மேவிய பரமனைத் தமிழ்நாட்டு மூவேந்தருடன் சென்று வழிபட்டுத் திருப்புகழ் பாடினார் சுந்தரர். 

     "முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த பாடல்" என்று அவர் தாமே கூறுதலால் இவ்வுண்மை அறியப்படும். பரம்பொருளாகிய ஈசன் கோயில் கொண்டமையால் அது பரங்குன்றென்னும் பெயர் பெற்றதென்றும் அறியமுடிகிறது.


பருப்பதம்

    இந்நாளில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் ஸ்ரீசைலம் என்னும் தலமே பருப்பதம் ஆகும். 

     கல்லார்ந்த வழி நடந்து, அரிதிற் காண்டற்குரியது அப்பதி. "செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பத மலை" என்று சுந்தரர் பாடியதன் கருத்து இதுவே போலும்! 

    கிருஷ்ண நதிக்கரையிலுள்ள குன்றுகளிடையே நிவந்தோங்கி நிற்கும் பருப்பதத்தின் நடுநாயகமாக மல்லிகார்ச்சுனம் என்னும் திருக்கோயில் விளங்குவதாகும். அதைச் சார்ந்த அளகேச்சுரம் முதலான பல ஆலயங்களும் மண்டபங்களும் ஆற்றின் இருமருங்கும் உள்ளன.


இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment