இதழ் - 83 இதழ் - ௮௩
நாள் : 26-11-2023 நாள் : ௨௬-௧௧-௨௦௨௩
திரையர்
பழந்தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினர் திரையர் ஆவார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர்.
தொண்டை நாட்டை ஆண்ட பண்டை அரசன் ஒருவன் இளந்திரையர் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந்திரையனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையினைப் பாடியுள்ளார்.
இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்கி வருகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment