பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 66                                                                                            இதழ் -
நாள் : 30-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
     
 
இடைச்சொல்
 
கொல் என்னும் இடைச்சொல்
 
“கொல்லே ஐயம் அசைநிலை கூற்றே” (நன்னூல், நூற்பா.எண். 435)

ஐயம், அசைநிலை என்னும் இரண்டு பொருள்களில் கொல் என்னும் இடைச்சொல் வரும். 
ஐயம் என்பது தெளிவின்மை என்னும் பொருளைத் தரும்.

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
  
இக்குறட்பாவில் வான் மகளா? மயிலா? பெண்ணா? என்னும் ஐயத்தை உண்டாக்குகின்றது.

அசைநிலை
    
 “கற்றதனா லாய பயனென் கொல்….”        
    
 இவ்வடியில் கொல் வேறு பொருளின்றி அசைநிலையாக வந்துள்ளது.

மன் என்னும் இடைச்சொல்

மன் என்னும் இடைச்சொல் ஆறு பொருள்களில் வரும்.  
அவையாவன, அசைநிலை, ஒழியிசை, ஆக்கம், கழிவு, மிகுதி, நிலைபேறு ஆகும்.

சான்று
    கூரியதோர் வாள்மன்          - ஒழியிசை
    அதுமன் கொண்கன் தேரே     - அசைநிலை
    எந்தை எமக்கருளுமன்         - மிகுதி

     மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
     கழிவு  மிகுதி  நிலைபே றாகும் 
                              ( - நன்னூல், நூற்பா. எண். 432 )

மற்று என்னும் இடைச்சொல்

மற்று என்னும் இடைச்சொல் மூன்று பொருளில் வரும்.
அவை ஆவண வினைமாற்று, அசைநிலை, பிறிது என்பனவாகும்.
 
    “வினைமாற்று அசைநிலை பிறிதெனும் மற்றே”  
 
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment