தெருவில் செல்லும் போது அங்குள்ள நாய் குரைத்துக்கொண்டே அருகில் வரும். இதனையே குரைக்கின்ற நாய் கடிக்காது என்றும் கடிக்கின்ற நாய் குரைக்காது என்றும் நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
' குழைகின்ற நாய் கடிக்காது '
ஒருவரிடம் நாயானது குழைந்து கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் வந்தால் அந்நாய் அவரைக் கடிக்காது. இதனையே 'குழைகின்ற நாய் கடிக்காது' என்ற நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் நாம் இதனைத் தவறாகக் 'குரைக்கின்ற நாய் கடிக்காது' என்று பொருள் விளங்கிக் கொள்கிறோம். (ஆனால், இங்கு குரைக்கின்ற நாய் கடிக்கும் என்பது பொருள்)
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment