பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 42                                                                                           இதழ் - ௪
நாள் : 12-02-2023                                                                            நாள் : ௧௨-0௨-௨௦௨௩
  
         
 
தமிழ்ச்சொல் தெளிவோம்

 
  • இந்தத் தேயிலைத்  தோட்டம் ஐம்பது ஏக்கரில் காணப்படுகிறது.
  • இந்தத் தேயிலைத்  தோட்டம் ஐம்பது காணியில் காணப்படுகிறது.
  • ஏரோபிளேன் விபத்துக்கள் பயத்தை ஏற்படுத்துகின்றது.
  • வானூர்தி விபத்துக்கள் பயத்தை ஏற்படுத்துகின்றது.
  • ஏஜென்ட் மூலம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
  • முகவர் மூலம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
  • தேன்மொழி தனது சிறுவயதுப் படங்கள் வைக்கப்பட்டிருந்த ஆல்பத்தை எடுத்துப் பார்த்தாள்.
  • தேன்மொழி தனது சிறுவயதுப் படங்கள் வைக்கப்பட்டிருந்த வைப்பேட்டை எடுத்துப் பார்த்தாள்.
  • அறிவழகனுக்கு தூசியினால் அலர்ஜி ஏற்பட்டது.
  • அறிவழகனுக்கு தூசியினால் ஒவ்வாமை ஏற்பட்டது.

     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment