பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 170                                                                                     இதழ் - ௧0
நாள் : 17 - 08 - 2025                                                                   நாள் :  - ௨௦௨

 



சான்றோர் பெயரால் எழுந்த ஊர்கள்

புலவரும் ஊர்ப்பெயரும்

காரிகைக் குளத்தூரார்

    சோழ மண்டலத்திலுள்ள மிழலை நாட்டில் தமிழ் வளர்த்த தலைவர் பலர் தழைத்து வாழ்ந்தனர். அன்னவருள் ஒருவனாகிய கண்டன் மாதவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தினன்; மிழலை நாட்டைச் சேர்ந்த நீடூர்க் கோவிலில் கண்ட சாசனப் பாட்டால் அவன் செய்த திருப்பணிகள் அறியப்படுகின்றன. "புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் விருப்புறச் செய்தோன்" என்று புகழப்படுதலால் பட்டி மண்டபம் ஒன்று அவன் கட்டினான் என்பது விளங்கும். இத்தகைய மிழலை நாட்டுக் குறுநில மன்னனைக் "காரிகைக் குளத்தூர் மன்னவன்" என்று அச்சாசனம் கூறுகிறது. தமிழில் யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கணம் செய்தவர் அமிதசாகரர் என்ற சமண முனிவர் என்பது அந் நூற்பாயிரத்தால் அறியப் படுகின்றது. அவ்வாசிரியர்பால் அன்பு கூர்ந்து, அவரை அழைத்து வந்து, குளத்தூரில் வைத்து ஆதரித்துக் காரிகை நூல் இயற்றுவித்தவன் கண்டன் மாதவன் ஆவார். காரிகை என்ற அப்புலவரின் பெயரில் உருவான ஊர் பின்னாளில் காரிகைக்குளத்தூர் என வழங்கலாயிற்று. 

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment