பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 
இதழ் - 59                                                                                           இதழ் -
நாள் : 11-06-2023                                                                              நாள் : -0-௨௦௨௩
 
      
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
 

தமிழில் வழங்கப்படும் பிற மொழிச் சொற்கள்

தமிழ் சொற்கள்

சங்கம்

மன்றம்

டெட் லைன்

குறித்த காலம்

அல்வா

இனிப்புக்களி

ஆயுதம்

கருவி

எக்கச்சக்கம்

மிகுதி

 
 
 
 
 
 
  • மூவேந்தர் ஆட்சி காலத்தில் தமிழ்ச்  சங்கம் இருந்ததாகக் கருதப்படுகிறது.
  • மூவேந்தர் ஆட்சி காலத்தில் தமிழ்  மன்றம் இருந்ததாகக் கருதப்படுகிறது.
  • பணம் கட்டுவதற்கான டெட்லைன் நாளையுடன் முடிவடைகிறது.
  • பணம் கட்டுவதற்கான குறித்த காலம் நாளையுடன் முடிவடைகிறது.
  • திருநெல்வேலி அல்வாவிற்குப் பெயர் பெற்றது.
  • திருநெல்வேலி இனிப்புக்களிக்குப் பெயர் பெற்றது.
  • எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.
  • எழுத்தை கருவியாகப் பயன்படுத்தலாம்.
  • ஆய்வு வேலை எக்கச்சக்கமாக உள்ளது.
  • ஆய்வு வேலை மிகுதியாக உள்ளது.
  
     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
 

No comments:

Post a Comment