பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 47                                                                                          இதழ் -
நாள் : 19-03-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
   
 
வேற்றுமை
 
வேற்றுமை
    நாம் ஒரு சொற்றொடரை எழுதுகின்றபோது அதில் பிழை ஏற்படாமல் இருப்பதற்கும் பொருள் மாறுபடாமல் அல்லது குழப்பமடையாமல் இருப்பதற்கும் வேற்றுமை பயன்படுகிறது. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.
 
வேற்றுமை உருபு
    பெயர்ச்சொல்லின் இறுதியில் ஓர் உறுப்பாக இணையும் ஒட்டுச்சொல் வேற்றுமை உருபு எனப்படும். இது தனித்து பொருள்தராது. 
 
வகைகள்
    வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,
  • முதலாம் வேற்றுமை (எழுவாய்)
  • இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள்)
  • மூன்றாம் வேற்றுமை (கருவி)
  • நான்காம் வேற்றுமை (கொடை)
  • ஐந்தாம் வேற்றுமை (நீங்கல்)
  • ஆறாம் வேற்றுமை (உடைமை)
  • ஏழாம் வேற்றுமை (இடம்)
  • எட்டாம் வேற்றுமை (விளி). 
    இவற்றில்,
  • முதல் வேற்றுமையானது எழுவாய் வேற்றுமை எனவும்
  • எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை எனப்படும். 
எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை. 
ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன.
  • இரண்டாம் வேற்றுமை - ஐ
  • மூன்றாம் வேற்றுமை  - ஆல், ஆன், ஒடு, ஓடு
  • நான்காம் வேற்றுமை - கு
  • ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
  • ஆறாம் வேற்றுமை - அது, ஆது, அ
  • ஏழாம் வேற்றுமை – கண், உள்

“ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை” 
                                     - நன்னூல், நூற்பா எண். 291
 
    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment