இதழ் - 134 இதழ் - ௧௩௪
நாள் : 17- 11 - 2024 நாள் : ௧௭ - ௧௧ - ௨௦௨௪
திரிபுவன வீரன்
தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும். திருவிடை மருதூருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கள் சிறப்பும் திரிபுவன வீரன் பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப் பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்று பெயர் பெற்றுத் திரிபுவனம் என திரிந்து வழங்கப்படுகிறது.
அவ்வூரில் சிறந்து விளங்கும் சிவாலயம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட தென்று சாசனங்கள் கூறும். கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்தாக அறிந்தோர் கருதுகின்றனர். இன்னும் சீகாழி வட்டத்திலுள்ள திரிபுவன வீரமங்கலம் என்ற ஊரும் இக்குலோத்துங்கன் பெயர்ப் பெற்றதாகத் தோன்றுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment