இதழ் - 70 இதழ் - ௭0
நாள் : 27-08-2023 நாள் : ௨௭-0அ-௨௦௨௩
பதம்
பதம்
பதம் என்பதற்கு சொல் என்று பொருள். பதம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து ஒரு பொருள் தந்தால் அது பதம் எனப்படும். வகைகள்
பதம் இரண்டு வகைப்படும். அவையாவன,
பதம் இரண்டு வகைப்படும். அவையாவன,
- பகாப்பதம் - பகா என்றால் பிரிக்க இயலாதது என்று பொருள்படும்.
- பகுபதம் - பகுத்தல் என்றால் பிரித்தல் என்பது பொருளாகும்.
பகாப்பதம்
பிரிக்க இயலாத, பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும்.
பிரிக்க இயலாத, பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும்.
சான்று
- நிலம்
- நட
- மற்று
- உறு
பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடித்தியல் கின்ற
பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்.”
(நன்நூல், நூற்பா. எண். 131)
முன்னே யொன்றாய் முடித்தியல் கின்ற
பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்.”
(நன்நூல், நூற்பா. எண். 131)
பகாப்பதம் இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்துகள் வரை அமையும்.
- உண் - இரண்டெழுத்துப் பகாப்பதம்
- நிலம் - மூன்றெழுத்துப் பகாப்பதம்
- நெருப்பு - நான்கெழுத்துப் பகாப்பதம்
- பெருமிதம் - ஐந்தெழுத்துப் பகாப்பதம்
- குங்கிலியம் - ஆறெழுத்துப் பகாப்பதம்
- உத்திரட்டாதி - ஏழு எழுத்துப் பகாப்பதம்
பகாப்பதம் நான்கு வகைப்படும்.
- பெயர்ப் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
- இடைப் பகாப்பதம்
- உரிப் பகாப்பதம்
சான்று
- கல், நீர், பெண் - பெயர்ப் பகாப்பதம்
- வா, சொல், பார் - வினைப் பகாப்பதம்
- போல், கொல், மன் - இடைப் பகாப்பதம்
- நனி, தவ, உறு - உரிப் பாகப்பதம்
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment