- எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் படம் பார்ப்பது பிடிக்கும்.
- எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி கேலிச்சித்திரப் படம் பார்ப்பது பிடிக்கும்.
- குடும்பத்தை நிர்வாகம் செய்ய பட்ஜெட் தேவையானது.
- குடும்பத்தை நிர்வாகம் செய்ய வரவு செலவுத் திட்டம் தேவையானது.
- பிரதம மந்திரியான இந்திராகாந்தியை அவரது பாடி கார்டே சுட்டுக் கொன்றனர்.
- பிரதம மந்திரியான இந்திராகாந்தியை அவரது மெய்ப்பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர்.
- இன்று ஆபீஸ் மூடப்பட்டுள்ளது.
- இன்று அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
- ஆஸ்டல் மாணவர்களிடம் ஒழுங்குமுறை இருக்கும்.
- விடுதி மாணவர்களிடம் ஒழுங்குமுறை இருக்கும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment