பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 26                                                                                    இதழ் -
நாள் : 23-10-2022                                                                      நாள் : --௨௦௨௨

 
 
சந்தியக்கரம்
 
தமிழ்மொழியில் சந்தியக்கரம் என்பது கூட்டெழுத்தாகும்
 
சந்தி + அக்கரம் (அக்ஷரம்) = கூட்டு எழுத்து.
 
     எழுத்துக்கள் உச்சரிப்பு அடிப்படையில் இரண்டு எழுத்துகள் உருவானது போல இருக்கும். அவ்வாறான சந்தியக்கர எழுத்துகள் இரண்டாகும். அவையாவன? ‘ஐ’ மற்றும் ‘ஔ’ என்பனவாகும். இவற்றை கூட்டுயிர், கூட்டொலி எனவும் அழைப்பர்.
 
     பண்டைக்காலத்தில் ‘ஐ’ என்பது ‘அஇ’ எனவும், ‘ஔ’ என்பது ‘அஉ’ எனவும் எழுதப்பட்டன. தற்காலத்தில் ‘அய்’, ‘அவ்’ என்றும் எழுதப்படுகிறது.
 
சான்று
     ஐயர் - அய்யர்
     ஔவையார் - அவ்வையார் 

     “அம்மு னிகரம் யகர மென்றிவை
     எய்தி னையொத் திசைக்கு மவ்வோ
     டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன.”          
                                         - நன்னூல், எழுத்து -  நூற்பா-125
 
 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment