இதழ் - 127 இதழ் - ௧௨௭
நாள் : 29- 09 - 2024 நாள் : ௨௯ - ௦௯ - ௨௦௨௪
பழமொழி அறிவோம்
பழமொழி – 127
” வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி ”
விளக்கம்
முருங்கைக் கீரையை நன்றாக வேகவைத்தால் கெட்டுவிடும், அகத்திக்கீரையை நன்றாக வேகவில்லை என்றால் கெட்டுவிடும் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
” வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி ”
உண்மை விளக்கம்
இங்கு முருங்கைக் கீரையை நன்றாக வேக வைத்து உண்டால் அதில் உள்ள இரும்புச் சத்துகள் அனைத்தும் கெட்டுவிடும், அதேபோல் அகத்திக்கீரையை நன்றாக வேகவைக்காமல் உண்டால் அதில் உள்ள மருத்துவக் குணங்கள் உடலுக்குக் கிடைக்காமல் போகும் என்பதை உணா்த்தவே “வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி“ என்ற இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ளனர்.
முருங்கைக் கீரையை நன்றாக வேகவைக்காமலும் அகத்திக் கீரையை நன்றாக வேகவைத்தும் உணவிற்குப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் மருத்துவ குணங்கள் உடலுக்குக் கிடைக்கும்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment