இதழ் - 108 இதழ் - ௧0௮
நாள் : 19-05-2024 நாள் : ௧௯-0ரு-௨௦௨௪
பழமொழி – 108
“ உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர் ”
விளக்கம்
இரண்டு வலிமை பொருந்திய காளைகள் தம்முள் மாறுபட்டு இருந்தாலும் ஒரு நீா்த்துறையில் நின்று தனித்து நீா் குடிக்காது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
“ உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர் ”
உண்மை விளக்கம்
உற்றால் இறைவற்(கு) உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்(கு) ஒன்னாரோ(டு) ஒன்றுமோ! - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? 'உண்ணா
இரண்டேறு ஒருதுறையுள் நீர்'.
இரண்டு வலிமை பொருந்திய காளைகள் தம்முள் மாறுபட்டு இருந்தாலும் ஒரு நீர்த்துறையில் நின்று தனித்து நீ குடிக்காது. அதுபோலவே சிறந்த வீரன் ஒருவன் தன் மன்னனுக்கு துன்பம் வரும் நிலையில் பகைவரை எதிர்த்து நின்று இறக்க நேரிட்டாலும் பகைவரோடு நட்பு கொள்ள மாட்டான் என்பதை விளக்கவே 'உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment