இதழ் - 15 இதழ் - ௧௫
நாள் : 07-08-2022 நாள் : ௦௭-௦௮-௨௦௨௨
” சோழியன் குடுமி சும்மா ஆடாது ! ”
ஒருவன் தன் தேவைக்கு மட்டுமே மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாக நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
” சோழியன் குடுமி சும்மாடு ஆகாது ! ”
சோழியர்கள் என்பவர்கள் கோயில்களில் குடமுழுக்கு நிகழும் நாளில் கலசத்தில் உள்ள தண்ணீரைத் தன் தலையில் வைத்துச் சுமந்து கோபுரத்தின் உச்சயில் உள்ள கலசத்தின் மீது ஊற்றச் செல்பவர்கள் ஆவர்.
கோபுர உச்சிக்கு தலையில் கலசத்தைச் சுமந்து செல்லவும் கலசம் தலையிலிருந்து நழுவாமல் இருக்கவும் இச்சோழியார்கள் தலைக்குச் சும்மாடைப் பயன்படுத்துவர்.
சோழியர்கள் இயல்பாகவே தன்தலைமுடியை நீளமாக வளர்த்துக் குடுமி வைத்திருப்பர். என்னதான் நீளமாகக் குடுமி வளர்த்திருந்தாலும் கலசத்தைச் சுமந்து செல்லக் குடுமியைச் சும்மாடாகப் பயன்படுத்த முடியாது என்பதையே சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்ற இக்கிராமத்துப் பழமொழியின் உண்மை விளக்கமாகும்.
எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அதைச் செய்யக் குறிப்பிட்ட பொருள் இருந்தால் மட்டுமே செம்மையாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்ற உட்பொருளையும் இக்கிராமத்துப் பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
No comments:
Post a Comment