இதழ் - 187 இதழ் - ௧௮௭
நாள் : 04 - 01 - 2026 நாள் : 0௪ - 0௧ - ௨௦௨௬
பழமொழி அறிவோம்
பழமொழி – 187
' தெய்வம் காட்டும், ஊட்டுமா? '
விளக்கம்
ஒருவனால் ஒரு செயலைச் செய்ய முடியாத சூழலில் இறைவனிடம் வழிபட்டால் வழிகாட்டுவார் என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.
' தெய்வம் காட்டும், ஊட்டுமா? '
உண்மை விளக்கம்
நம்மால் முடியாத ஒரு காரியத்தை இறைவனிடம் வேண்டும் பொழுது இறைவன் ஏதாவது ஓர் வழி காட்டுவார் என்பது நம்பிக்கை. அந்த வழியைப் பின்பற்றி நமக்கான வழியை நாம் தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து அதைச் செய்து தர வேறுயாராவது வரமாட்டார்களா என்று சிந்திப்பது அறிவற்ற செயலாகும் என்பதைக் குறிக்கவே “தெய்வம் காட்டும், ஊட்டுமா?” என்று இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment